மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக் கூடும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: சகோதரர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு உண்டு.
கடகம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.
சிம்மம்: தொட்ட காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் அவ்வப்போது தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ் நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.
கன்னி: தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டி வரும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகி யிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.
விருச்சிகம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள், நண்பர் கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சிலருக்கு வேலை கிடைக்கும்.
மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.
கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். நீண்டகாலப் பிரச்சினைகள் முடிவுக்குவரும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago