இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைவாக நிறைவடையும்.

மிதுனம்: தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றி ருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். புதிய மனை வாங்குவீர்கள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய வாகனம் தொந்த ரவு தரும். பழைய கடனில் ஒன்று பைசல் ஆகும்.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள், உறவினர் கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவு திருப்தி தரும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர் கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய சம்பவங்களை நினைத்து வீண் குழப்பம் வேண்டாம்.

தனுசு: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். முன்கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: இன்று உங்களின் திறமைகள் வெளிப்படும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு உதவ வேண்டாம்.

கும்பம்: உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளை களின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்