மேஷம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங் களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடன்களை ஒவ்வொன்றாக பைசல் செய்வீர் கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு கள் நீங்கும். பணவரவு உண்டு. நீண்ட நாளாக இழுபறி யாக இருந்த வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்: முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அமைதி பெற தியானம் செய்யவும்.
» மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் - சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு
» வேலைவாய்ப்பு அடிப்படையில் இணை அல்லாத படிப்பு குறித்து உயர்கல்வித் துறை விளக்கம்
சிம்மம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
துலாம்: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திரு மணத்தை சிறப்பாக நடத்துவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உரு வாகும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் உரசல் வர வாய்ப்புண்டு.
மகரம்: சமயோஜித புத்தியால் பல காரியங்களையும் முடித் துக் காட்டுவீர்கள். யதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப் பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
கும்பம்: பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்து பேசுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago