இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ் வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு. கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண் டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

சிம்மம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பண வரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்: இழுத்தடித்த காரியங்கள் அனைத்தும் இனி முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம்
பிறக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கை களை நிறைவேற்றுவீர்கள். செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

தனுசு: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகன பழுது நீங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும் பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர், உறவினர்களின் உதவி கிட்டும்.

கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப் படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் பணம் தேவையான அளவு இருக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்