மேஷம்: உங்கள் இயல்பான, இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பயணங்கள் சிறப்பாக அமையும்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். பொருள் வரவு உண்டு.
கடகம்: எதையும் சமாளிக்கும் தைரியம், மனப் பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நவீன சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு.
கன்னி: எதற்கும் உணர்ச்சிவசப்படாமல், உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பிற்பகல் முதல் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாகன வகையில் செலவு கூடும்.
தனுசு: பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துகொள்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும்.
மகரம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து நடப்பார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். எதிலும் நிதானம் அவசியம்.
மீனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டாகும். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago