மேஷம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சி கரமான சம்பவங்கள் நடந்தேறும்.
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு.
கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர் கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
கன்னி: எதிலும் உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும். தாயார் ஆதரவாக இருப்பார்.
துலாம்: தடைகள் பல வந்தாலும் அதை எதிர்கொண்டு சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது நல்லது.
தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூரப் பயணங் களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். அடுத்தவர் விவ காரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.
மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விஐபி.கள் அறிமுகமாவார் கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவீர்கள்.
கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியில் இருந்த சுணக்கம் நீங்கும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago