மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை இழுபறியாக இருக்கும்.
ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
கடகம்: திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
» தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம் - விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு
சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவது தொடரும்.
கன்னி: பெற்றோர் உங்களின் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். யாருடனும் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பழுதான வாகனம் சரியாகும். பூர்வீக வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
தனுசு: வேலைச்சுமை இருக்கும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்து போகும். எனவே உணவில் கட்டுப்
பாடு அவசியம். உறவினர், நண்பர்களிடம் எல்லா
வற்றையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
மகரம்: அழகு, இளமை கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். மனதில் வீண் குழப்பம் இருக்கும். பழைய வீடு விற்பனையாகும்.
கும்பம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உறவினர் ஆதரவு உண்டு.
மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கோபம் குறையும். விஐபிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடனுதவி கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago