மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கடகம்: குடும்பத்தினரை அனுசரித்து போகவும்.ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
» ‘சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான்’ - 59 ஆண்டுக்கு முன்பே கணித்த எழுத்தாளர்
» லே பகுதியில் 3 சாலையும் முன்கூட்டியே திறப்பு - சீன எல்லையில் 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினை நீடிக்கும்.
கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்றை வாங்க முயற்சிப்பீர்கள்.
துலாம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்
தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை புதுப்பிக்கும் வேலைகள் தொடங்கும்.
விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்
கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களிடம் கறாராக இருக்க வேண்டாம்.
மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும்.
கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள்,நண்பர்கள் சந்திப்பால் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும்.
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். என்றாலும் தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago