மேஷம்: புது வாகனம், நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு உறவினர் சிலர் பொறாமைப்படுவார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கடகம்: தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.
சிம்மம்: அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாகும்.
கன்னி: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.
துலாம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். அநாவசிய செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விஐபிகளின் உதவியால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும்.
விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்
தனுசு: பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் வரக் கூடும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
மகரம்: சொந்த வீடு வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். கடனைத் தீர்க்க வழி பிறக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago