இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படக் கூடும். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். திடீர் பயணம் உண்டு.

கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகள் வெளிப்படும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிகப் பயணம் உண்டு.

கன்னி: தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

மகரம்: கனவுகள் நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்கள் நிறைவேறும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக் கூடும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மீனம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களால் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்