மேஷம்: எளிதில் முடியக் கூடிய வேலைகளும் இழுபறிக்குப் பின்னரே முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அநாவசிய செலவு தவிர்த்து விடுங்கள்.
ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவிகள் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுங்கள். சில காரியங்கள் இழுபறிக்குப் பின்னரே முடியும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக் கூடும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
தனுசு: தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல் வரக் கூடும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள்.
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சூழல் கனிந்து வரும்.
கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மீனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago