இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். ஆன்மிகப் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்ல வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. வழக்கு விவகாரங்கள் இழுபறியாகும்.

கடகம்: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியாக சமாளிக்கும் பக்குவம் பெறுவீர்கள். விஐபிகளால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சகோதரர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் சில காரியங்கள் நிறைவேறும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யாரை நம்புவது என்பதில் குழப்பம் வரும். கையொப்பமிட்டு காசோலைகளை வைக்க வேண்டாம். அடுத்தடுத்த செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

கும்பம்: வேலைச்சுமை இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறிக்குப் பின்னரே முடியும். ஒருவித பதட்டத்துடன் காணப்படுவீர்கள். இளைய சகோதரரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்