இந்தநாள் உங்களுக்கு எப்படி?  - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓய்வின்றி உழைப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். அநாவசியமாக அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். எதிலும் திட்டமிட்டு செயல்படு வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். நீண்ட நாட்களாக எதிர் பார்த்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கி யத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன வாகனம், மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்