மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மூத்த சகோதரர் உதவுவார்.
ரிஷபம்: நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிறமொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சகோதரர்களுடன் சுமுகமான நிலை ஏற்படும்.
கடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
சிம்மம்: குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். கலைப் பொருட்கள் சேரும்.
கன்னி: விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.
விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைகாட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்து போட வேண்டாம்.
தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும்.
மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும்.
கும்பம்: புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago