மேஷம்: சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த அரசு காரியங்கள் முடிவுக்கு வரும். வழக்கில் விவகாரங்கள் சாதகமாகும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
மிதுனம்: புதிய முயற்சிகள் எவ்விதத் தடையுமின்றி வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
கடகம்: பிரச்சினைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
சிம்மம்: சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
துலாம்: ஒரே நாளில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதனால் ஒருவித பதட்டத்துடன் காணப்படுவீர்கள். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.
விருச்சிகம்: வீண் அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.
மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கும்பம்: குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மீனம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago