மேஷம்: இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது.
ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமண காரியங்கள் கைகூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது நல்ல விதத்தில் முடியும்.
மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிமையான சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்துமோதல் வரும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.
கடகம்: பிரச்சினைகளை தீர்க்க வழி கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். புதிய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
சிம்மம்: பணத்தட்டுப்பாடு குறைந்து சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கனிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்-. உங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.
மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago