இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக் கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். மூத்த சகோதரி உதவுவார். கடனைத் தீர்க்க வழி கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: முன்கோபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: நெருங்கிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வரக் கூடும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.

துலாம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணம் ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மகரம்: சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கலகலப்பாக பேசி அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

கும்பம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வருவார்கள்.

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அதிக அக்கறை காட்டுவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வேற்றுமொழி பேசுபவரால் ஆதாயம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்