மேஷம்: பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் வரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.
ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மிதுனம்: அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பங்களெல்லாம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்..
கடகம்: ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கும் பக்குவம் பெறுவீர்கள். சகோதரர் வகையில் உதவியுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: யாருக்காகவும் உத்தரவாதம் தரவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
துலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். மனதில் குதூகலம் காணப்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
தனுசு: மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம்: சோம்பல் நீங்கும். பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து உதவுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
கும்பம்: தடுமாற்றங்கள் நீங்கும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஆன்மிகப் பயணம் ஏற்படும். வாகனம் அடிக்கடி பழுதாகும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago