இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்..

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் தொகை வசூலாகும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் .உதவுவார்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசியல் பிரமுகருடன் நட்பு ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: உறவினர்களின் கனிவான பேச்சு ஆறுதலைத் தரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.. மனைவிவழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

துலாம்: பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள்.. கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் பேச்சில் சாதுர்யம் வெளிப்படும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, எதிர்பாராத பயணங்கள் ஏற்படக் கூடும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மீனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்