இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

ரிஷபம்: உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும். பிற்பகல் முதல் தொட்டது துலங்கும்.

மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். முக்கிய விஷயங்களில் முன்னெச்சரிக்கை அவசியம்.

கடகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்..

கன்னி: தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

துலாம்: உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி நின்ற சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.

தனுசு: உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

மீனம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டை ரசனைக்கேற்ப புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்