இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும்.

ரிஷபம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தினருடன் நீண்டநாட்களுக்குப் பிறகு மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: அடிமனதில் நிலவிய பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து செல்வீர்கள்.

கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாத குணம் நீடிக்கும். பணம் எவ்வளவுதான் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு உண்டு.

கும்பம்: சில காரியங்களை சாதுர்யமாகச் செயல்பட்டு முடித்துக் காட்டுவீர்கள்.. மூத்த சகோதரருடன் நிலவிய மனஸ்தாபம் நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

மீனம்: மனக்குழப்பங்கள் விலகும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்