இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்..

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். நீண்டகாலக் கடனை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும்..

சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: ஒருவித படபடப்பு, டென்ஷன் வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும். தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைதூக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சாதாரண பேச்சுக்கூட சச்சரவில் முடியக் கூடும். எனவே நிதானமுடன் செயல்படுங்கள். யாரையும் அநாவசியமாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு: குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி தங்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராகும்.

மகரம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வேலைகள் இன்று முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். உங்களின் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கும்பம்: வீண்செலவுகளை தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்