இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கடகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகால பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்..

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும்.

துலாம்: அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு பரிந்து பேசப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்