மேஷம்: திருமணம் கைகூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உறவினர் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிப்பால் வீடு கலகலப்பாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கடகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் மனதை செலுத்துங்கள். எதிர்மறையான எண்ணங்கள் மேலோங்கும்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் நயமான வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்.
விருச்சிகம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசியல் கட்சி பிரமுகருடன் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.
தனுசு: கடந்தகால இனிமையான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.
கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சொந்த ஊரில் எதிர்ப்புகள் ஏற்படக் கூடும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடியுங்கள்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 mins ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago