மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மிதுனம்: தாயாருடன் எதிர்பாராது மனத்தாங்கல் வரும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. அடுத்தடுத்து செலவுகள் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.
சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு கட்டும் பணிகள் வேகமெடுக்கும்.
கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக் கூடும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். வெளியூரில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago