இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும்.

ரிஷபம்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கக் கூடும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.. பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு: விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடிவருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். ரசனைக்கேற்ப வீட்டை மாற்றியமைப்பீர்கள்.

மகரம்: கனவு நனவாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக் கூடும். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

மீனம்:. உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்