இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: முக்கிய அலுவல்களை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கன்னி: குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

துலாம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். வழக்கு சாதகமாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்படக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொந்தபந்தங்களுடன் சுமுகமான நிலை உருவாகும்.

மீனம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அழகு, இளமை கூடும். தொட்ட காரியங்கள் துலங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்