மேஷம்: ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். தரிசிக்க நினைத்த புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும்.
கடகம்: எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும். கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்.
சிம்மம்: வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை மாற்றியமைப்பது குறித்து யோசிப்பீர்கள். தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
கன்னி: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.
துலாம்: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைகாட்டும். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் மனம் சஞ்சலப்படும். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள்.
தனுசு: சுபச்செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். யாருக்கும் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம்: கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வழி பிறக்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும்.
கும்பம்: பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். முன்பு செய்த .உதவிக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். பணவரவு உண்டு
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago