இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவிவழியில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: நீண்டநாட்களாக இழுத்தடித்த காரியங்கள் இன்று முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

கடகம்: மன உளைச்சல் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். வாகனப் பழுது நீங்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வீட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

கன்னி: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். மூத்த சகோதரரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்..

மகரம்: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வீடு மாறுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

மீனம்: உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்