மேஷம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பர் உங்களை சந்திப்பார்.
மிதுனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். நீண்டகால கடனை தீர்ப்பதற்கு வழி பிறக்கும்.
கடகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கன்னி: மனைவிவழி உறவினர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். சரியான திட்டமிடல் மூலம் காரியங்கள் கைகூடும்.
துலாம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்கள், நண்பர்களால் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளை தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும்.
தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.
கும்பம்: திட்டமிடாத செலவுகள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அலைச்சலுக்குப் பிறகு காரியங்கள் முடியும்.
மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago