இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் வெற்றியுண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதிர்ப்பார்ப்புகள் தடங்கல் இன்றி நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சியில் திடீர் திருப்பம் உண்டாகும்.

சிம்மம்: சோர்வுடன் காணப்படுவீர்கள். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகளை ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பது நல்லது. வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கன்னி: சுப செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி சகல வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு, மனை வாங்குதல் போன்றவை நடக்கும். சகோதரர் வகையில் உதவியுண்டு. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மகரம்: வீண் விரயம், பிள்ளைகளால் பொருள் செலவு வரக் கூடும். வாகனம் பழுதாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: எதிர்பார்த்த பணம் இழுபறிக்குப் பின்னர் கைக்கு வரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்