இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் பளிச்சிடும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள்.

தனுசு: விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும்.

மகரம்: பேச்சில் சாதுர்யம் வெளிப்படும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். நீண்ட தூரம் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வேலைச் சுமை அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்