மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.
மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்: சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு அவதிப்படாதீர்கள். உறவினர், நண்பர்களிடம் முன்கோபத்தைக் காட்ட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைச்சுமையால் உடல் சோர்வு, அசதி ஏற்படும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். உறவினர், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி தங்கும்.
மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும். மனதில் சோர்வு நிலவும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago