இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: வெகுநாட்களாக மனதை உறுத்திவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச்செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்: புது முயற்சிகள் தடைகளின்றி நிறைவேறும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் நீடிக்கும்.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

தனுசு: எதிர்பார்த்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். பணவரவு உண்டு.

மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும்.

மீனம்: தெளிவான முடிவுகள் எடுத்து எல்லோரையும் அசத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்