மேஷம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மாலை முதல் தடைகள் விலகும். பணவரவு உண்டு.
மிதுனம்: எதையும் திட்டமிட்டு செயல்படுங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும்.
கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கிய காரியங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
தனுசு: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மகரம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
கும்பம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கடனை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago