மேஷம்: பணவரவு தாராளமாக இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுபச் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். வீடு வாங்க, கட்ட கடன் கிடைக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புது வீடு வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்துமோதல் ஏற்படக் கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் காட்ட வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும்.
கன்னி: விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்: தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகளின் குறைகளை சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். பால்ய நண்பர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
தனுசு: விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் எதிர்பாராது கருத்துமோதல்கள் வரும்.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
கும்பம்: உங்களின் செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
மீனம்: புதியவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago