இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களால் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். அரசு அதிகாரிகளால் நன்மை உண்டு.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கடகம்: சமயோசித புத்தியால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மனைவியுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

கன்னி: மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.

தனுசு: இழுபறியாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு காண் பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயாரின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கும்பம்: அழகு, இளமை கூடும். சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: வீண் செலவுகள் ஏற்படக் கூடும். உறவினர் பகை, நண்பர் களுடன் மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்