இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிரிகளை சாதுர்யமாகச் செயல்பட்டு வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பெறறோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும்.

ரிஷபம்: வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வங்கிக் கடன் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: பெற்றோரின் உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை. கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

கடகம்: குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல் கட்சி பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். வீடு கட்டும் பணி நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள்.

துலாம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்திலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தை, ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்..

தனுசு: தாமதமாகி வந்த வீடு கட்டும் பணி முடிவடையும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்..

மகரம்: ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்துபோன கசப்பான சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.

மீனம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுடன் நிலவிய மனஸ்தாபம் நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்