இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிறமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாகும்.

கடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடியுங்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

சிம்மம்: குழப்பமாக இருந்து சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு, மனை வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும்.

கன்னி: வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

துலாம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பும் உதவியும் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.

விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாத கையெழுத்து போட வேண்டாம்.

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். வீண் அலைச்சல், செலவுகள் ஏற்படக் கூடும். தாயாரின் உதவி கிடைக்கும்.

மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்வதற்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். முக்கிய முடிவுகளை தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்