மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். தோற்றப் பொலிவு கூடும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.
மிதுனம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினைகள் வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கன்னி: பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
துலாம்: குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும்
விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள்..
மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பு வெற்றி தரும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago