இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராது மனத்தாங்கல் வரும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பால்ய நண்பருடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிறருக்கு பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்..

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். சொத்து தொடர்பான சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வாகனம் திடீர் செலவு வைக்கும்.

தனுசு: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.

மகரம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு உண்டு.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்