மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களால் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படக் கூடும்.
ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் புது வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கடகம்: சமயோசித புத்தியால் காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வீ்ரகள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். திடீர் உடல்நலக் குறைவு வந்து நீங்கும். மனைவியுடன் மனத்தாங்கல் ஏற்படலாம்.
கன்னி: மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். குடும்ப சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். ரசனைக்கேற்ப வீட்டை மாற்றியமைப்பீர்கள்.
தனுசு: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வேலை விஷயமாக நல்ல தகவல் வரும்.
கும்பம்: அழகு, இளமை கூடும். சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்: வீண் செலவுகள் ஏற்படக் கூடும். உறவினருடன் பகை, நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்படலாம். சில வேலைகளில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago