மேஷம்: தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்ப செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை கூடிவரும்.
கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
விருச்சிகம்: நீண்டநாட்களாக தொல்லை தந்த கடன் பிரச்சினைக்கு ஒருவழியாக தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வேலைகள் தொடரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தில் சுபசெலவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு கலகலப்பாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான பதில் வரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago