இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

ரிஷபம்: மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: உங்களுடைய செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். விலகியிருந்த நண்பர், உறவினர் தேடி வந்து பேசுவார்கள்.

கடகம்: தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நண்பர்களுடன் பகை வரக்கூடும். இளைய சகோதரர் வகையில் இடையூறுகள் இருக்கும். மாலை முதல் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களிடம் உதவி கேட்டால் அவர்கள் உண்மையாகவே சிரமப்படுகிறார்களா என விசாரித்து உதவுவது நல்லது.

கன்னி: வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: முன்கோபத்தால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. எந்த வேலையும் பலமுறை அலைந்த பிறகே முடியும். மாலை முதல் சாதகமான நிலை ஏற்படும்.

மகரம்: உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வீட்டை ரசனைக்கேற்ப விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். ஆன்மிக பயணம் ஏற்படக் கூடும்.

கும்பம்: புது தெம்பு பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு. அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் பளிச்சிடும். முக்கிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்