இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்படக் கூடும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் ஏற்படலாம்.

தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். வாகனப் பழுதை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலம் சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: எதிர்காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்