இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீண் குழப்பம் வந்து செல்லும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலுக்குப் பிறகு முடியும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் காட்ட வேண்டாம்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: காரியங்களில் அவசரம் வேண்டாம். கணவன் - மனைவிக்குள் நிலவிய மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும்.

துலாம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முக்கிய ஆலோசனை எடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்