இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.

ரிஷபம்: சகோதரர் வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்

கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

துலாம்: அடிமனதில் இந்துவந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகன வசதி பெருகும்.

கும்பம்: கோபம், பதற்றம் குறையும். இழுபறியாக இருந்துவந்த அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்