மேஷம்: யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசு காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணியத் தலம் செல்ல திட்டமிடுவீர்கள்.
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும். கூடாப்பழக்கமுள்ளவரின் சகவாசம் வேண்டாம்.
கன்னி: பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைபட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் சாதுர்யம் மகிழ்ச்சியைத் தரும்.
துலாம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொந்தரவு விலகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். பணவரவு உண்டு.
தனுசு: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள்.
கும்பம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago