மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சிலர் வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் ஏற்படக் கூடும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவுடன் பழகுங்கள்.
சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் மளமளவென்று முடியும்..
கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.
விருச்சிகம்: நிர்வாகத் திறன் பளிச்சிடும். ஓரளவு பணவரவு .உண்டு. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள்.
தனுசு: பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். வீடு மாற திட்டமிடுவீர்கள்.
மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் எதிர்பாராத நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago