இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

கடகம்: சிறுசிறு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். ரத்த அழுத்தத்தை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர்கள் மத்தியில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள்.

கன்னி: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். பணவரவு உண்டு.

துலாம்: உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: மனப்போராட்டங்கள் விலகும். நீண்ட நாட்களாக குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள்.

தனுசு: தன்னம்பிக்கையுடன் காரியங்களை தொடங்குவீர்கள். பேச்சில் சாதுர்யம் வெளிப்படும். குடும்பத்தில் சுபநிகழச்சிகளுக்கு ஏற்பாடாகும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

மீனம்: சின்ன காரியங்களையும் பலமுறை போராடி முடிப்பீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். விருந்தினர் வருகையால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்